நான் சமீபத்தில் படித்து ரசித்த கவிதை தொகுப்பு...
மழை
முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!
-பிரியன்
ஒற்றுமை
பகலை
கொள்ளையடிக்கும்
இரவிடமும்....
இரவில்
வெள்ளையடிக்கும்
பகலிடமும்....
ஒற்றை
ஒற்றை
துளியாய் வீழ்ந்து
பள்ளத்தை
நிரப்பும் மழையிடமும்....
ஓடி.... ஓடி.....
வந்து
மரத்தை வளைக்கும்
காற்றிடமும்......
கூடி...... கூடி.....
வந்து
கரையை உடைக்கும்
அலையிடமும்
சேர்ந்து
சேர்ந்து
கருப்பு வானவில்லாய்
சிறகு விரிக்கும்
சிட்டுகளிடமும்....
ஒன்று ஒன்றாய்
வந்து
வானில்
அழகை ஜனிக்கும்
நட்சத்திரங்களிடமும்...
கற்றுக்கொள்...
கற்றுக்கொள்....
ஒற்றுமையை....
ஒற்றுமையை...
-திருக்குவளை அறிவழகன்
No comments:
Post a Comment